யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப் படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு ஆண்டு தோறும் மருத்துவர்களுக்கான கம்பைண்டு மெடிக்கல் சர்வீசஸ் தேர்வை நடத்தி அதன் மூலம் மத்திய அமைச்சகம் சார்ந்த மருத்துவப் பணி யிடங்களை நிரப்பி வருகிறது.
இந்த ஆண்டிற்கான தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் 454 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது:
2018 ஆக.,8 அடிப்படையில் விண்ணப் பதாரர்கள் 31 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
எம்.பி.பி.எஸ்., படிப்பின் எழுத்து மற்றும் பிராக் டிகல் தேர்வுகளைப் பூர்த்தி செய்து வெற்றி பெற்றவர்கள் இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தற்போது இறுதித் தேர்வை எதிர்கொள்ள இருப்பவர்களும் நிபந்தனைகளுக்கு உட் பட்டு விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை:
இரண்டு கட்ட தேர்ச்சி முறைகளை இத்தேர்வு உள்ளடக்கியது. முதல் நிலையில் கம்ப்யூட்டர் வாயி லான தேர்வும், இரண்டாம் நிலையில் பெர்சனாலிடி தேர்வும் இருக்கும்.
தேர்வு மையங்கள்:
சென்னை, மதுரை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மையங்களில் இத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் முறையில் விண்ணப் பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ. 200.
கடைசி நாள் :
2018 மே 25.
விபரங்களுக்கு:
No comments:
Post a Comment