தேவையானவை:
ஸ்வீட் கார்ன் முத்துகள் - ஒரு கப்
கடலை மாவு - அரை கப்
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஸ்வீட் கார்ன் முத்துகளை ஆவியில் 4-5 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து ஒன்று அல்லது இரண்டு சுற்றுவிடவும். பிறகு கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் சூடான எண்ணெய் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டுக் கலவையைச் சிறிது சிறிதாக உருட்டிப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: மிளகாய்த்தூளுக்குப் பதிலாகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கலாம்.
No comments:
Post a Comment