தேவையானவை
பூங்கார் அரிசி - 4 குவளை,
உளுந்து - 1 குவளை,
வெந்தயம் - 1 டீஸ்பூன்,
முடக்கத்தான் - 2 குவளை,
சீரகம் - 3 டீஸ்பூன்,
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
செய்முறை
பூங்கார் அரிசியை தனியாகவும், உளுந்துடன் வெந்தயம் சேர்த்தும் ஊற வைக்கவும். ஊறிய பின் இரண்டையும் தனித்தனியாக கிரைண்டரில் ஆட்டி உப்பு சேர்த்து கலந்து 6 மணி நேரம் புளிக்க வைக்கவும். புளித்த மாவுடன் முடக்கத்தான் கீரை, சீரகம், மஞ்சள் பொடி சேர்த்து அரைக்கவும். சிறிது தண்ணீர் கலந்து தோசை மாவு பதத்தில் கரைத்து ஊற்றவும்.
No comments:
Post a Comment