Search This Blog

Tuesday, January 30, 2018

Mixed sprouts snacks


 கலவை தைய சிற்றுண்டி  ( Mixed sprouts snacks )



 


தேவையானவை .....
கறுப்பு உளுந்து, சோளம், பச்சைப் பட்டாணி, பட்டர் பீன்ஸ், பச்சைப் பருப்பு, ராஜ்மா - தலா 1 கைப்பிடி.

தாளிக்க...எண்ணெய் - 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
பொடித்த காய்ந்த மிளகாய் - 4,
தேங்காய் துருவியது அல்லது பல் பல்லாக நறுக்கியது - 1/4 கப்.

பொடிக்க...கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
தனியா - 2 டீஸ்பூன்.



செய்முறை

பொடிக்க கொடுத்ததை வெறும் கடாயில் வறுத்து உப்பு சேர்த்து கரகரப்பாக பொடித்து கொள்ளவும். முதல் நாள் இரவே தானியங்களை ஊறவைத்து, மறுநாள் உப்பு சேர்த்து குழையாமல் வேகவைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து தாளிக்கக் கொடுத்த பொருட்களை தாளித்து சுண்டலில் கொட்டி, இத்துடன் பொடித்த பொடியை தூவி கலந்து பரிமாறவும்.

மேலும் 

No comments:

Post a Comment