Search This Blog

Thursday, June 8, 2017

பூண்டு குழம்பு

தேவையான பொருட்கள்:

    Image result for garlic
  •  வெள்ளை பூண்டு - 100 கிராம்
  • சின்ன வெங்காயம் - 200 கிராம்
  • தக்காளி - 100 கிராம்
  • உப்பு - தேவையான அளவு
  • புளி - தேவையான அளவு
  • மல்லித்தூள் - 1 ½ ஸ்பூன்
  • சீரகத்தூள் - ¾ ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - ¾ ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - ¾ ஸ்பூன்
  • நல்ல எண்ணெய் - 50 கிராம்
  • கடுகு - ½ ஸ்பூன்
  • கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெள்ளைப்பூண்டினை சுத்தம் செய்து தோலுரித்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை சுத்தம் செய்து சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும். மல்லித்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள்  ஆகியவற்றுடன் தேவையான தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மசாலா தயார் செய்யவும்.

வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம், தோலுரித்த வெள்ளைப் பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். இருநிமிடங்கள் கழித்து தக்காளியைச் சேர்த்து வதக்கவும். தக்காளி சுருள  வதங்கியவுடன் மசாலாக் கலவையைச் சேர்க்கவும். தேவையான தண்ணீர்,புளிக் கரைசல், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு நன்கு கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும். எண்ணெய் பிரிந்ததும் இறக்கி விடவும். இப்போது சுவையான பூண்டு  குழம்பு தயார்.


1. பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி

பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி குணங்களுக்காக நன்கு அறியப்படுவது தான் பூண்டு. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் புழு தொற்றுக்களைக் கட்டுப்படுத்த இது உதவிடும். ஈ.கோலி, சால்மோனெல்லா எண்டெரிடிடிஸ் போன்ற பாக்டீரியாக்களை கொல்வதன் மூலமாக உணவு நச்சுகளை தடுப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது நற்பதமான பூண்டு.

2.சரும தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க..

பூஞ்சையால் ஏற்படக்கூடிய படர்தாமரை மற்றும் பாதப்படை போன்ற சரும தொற்றுக்களை குணப்படுத்த பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனம் பெரிதும் உதவுகிறது.

3. இரத்தத்தை சன்னமாக்குதல் 

 பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனத்தில் இரத்தத்தை உறைதல் எதிர்ப்பி குணங்கள் இருப்பதால், உடலில் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்கும். இதனால் அறுவை சிகிச்சைக்கு பின், இரத்த கசிவு அதிகரிப்பதற்கான இடர்பாடுகள் அதிகம்.

4.இரத்த கொதிப்பை குறைக்கும் 

ஏஞ்சியோடென்சின் II என்ற புரதம் நம் இரத்த குழாய்களை சுருங்க வைக்கும். இதனால் இரத்த கொதிப்பு அதிகரிக்கும். பூண்டில் உள்ள அல்லிசின், ஏஞ்சியோடென்சின் II-வின் நடவடிக்கைகளை தடுக்கும். இதனால் இரத்த கொதிப்பை குறைக்கும். பூண்டில் உள்ள பாலிசல்ஃபைட்ஸ், சிவப்பு இரத்த அணுக்களால் ஹைட்ரஜன் சல்பைடு என்ற வாயுவாக மாற்றப்படும். நம் இரத்த குழாய்களை ஹைட்ரஜென் சல்பேட் விரிவாக்குவதால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க அது உதவிடும்.

5.இதயத்தை பாதுகாக்கும் 

 
நெஞ்சு வலி மற்றும் தமனித் தடிப்பு போன்ற இதயகுழலிய பிரச்சனைகளில் இருந்து நம் இதயத்தை பூண்டு பாதுகாக்கும். இதிலுள்ள இதய பாதுகாப்பு குணத்திற்கு பல காரணங்கள் அடங்கியுள்ளது. வயது ஏற ஏற, விரிவடையும் திறனை தமனிகள் இழக்கத் தொடங்கும். இதனை குறைக்க பூண்டு உதவும். மேலும் ஆக்சிஜன் இயக்க உறுப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் இதயத்தை காக்கும். பூண்டில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள், இரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும் தமனித் தடிப்பு வளர்ச்சியையும் மெதுவாக்கும். அஜோனின் இரத்த உறைதல் எதிர்ப்பி குணங்களால், இதயத்திற்குள் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்க உதவும்.

6.கொலஸ்ட்ராலை குறைக்கும் 

நம் இரத்த ட்ரைகிளிசரைடுகள் மற்றும் மொத்த கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையும், தமனி பிளேக் உருவாக்கத்தை குறைக்கும் தன்மையும், பூண்டில் அதிகமாக உள்ளது.

7.அலர்ஜிகளை எதிர்க்கும் 

 பூண்டில் அழற்சி எதிர்ப்பி குணங்களும் அடங்கியுள்ளது. இதனால் நம் உடல் அழற்சிகளை எதிர்த்து போராட இது உதவிடும். டையாலில் சல்பைடு மற்றும் தியாக்ரெமோனோன் ஆகியவை பூண்டில் இருப்பதால் இதற்கு கீல்வாத எதிர்ப்பி குணங்களும் உள்ளது. அலர்ஜியால் ஏற்படும் அழற்சியை (ஒவ்வாமை நாசியழற்சி போன்றவைகள்) குணப்படுத்த பூண்டு உதவுகிறது. பச்சையாக பூண்டை ஜூஸாக்கி பருகினால், படை மற்றும் மூட்டப்பூச்சி கடியினால் ஏற்படும் அரிப்பை உடனடியாக நின்றுவிடும்.

8.சுவாச பிரச்சனைகளுக்கான தீர்வு

 பூண்டை தினசரி பயன்படுத்தி வந்தால், சளி ஏற்படும் எண்ணிக்கைகள் குறைந்துவிடும். அதிலுள்ள பக்டீரியா எதிர்ப்பி குணங்கள் தொண்டை எரிச்சல்களை குணப்படுத்த உதவும். மேற்பகுதி சுவாச பாதை தொற்றுக்களின் தீவிரத்தை குறைக்க பூண்டு உதவிடும். ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல் கோளாறுகளுக்கும் இது பயனளிக்கும். அதனால் கண்டிப்பாக இது ஒரு விலை மதிப்பற்ற மருந்தே. இதன் சளிநீக்கம் திறனால் தீவிர மூச்சுக்குழாய் அழற்சியும் குறையத் தொடங்கும்.

No comments:

Post a Comment