பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான செயில் நிறுவனத்தில்
நிர்வாக மற்றும் நிர்வாகம் சாரத பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி – காலியிடங்கள் விவரம்:
பணி: Operator Cum Technician (Trainee) – 134
சம்பளம்: மாதம் ரூ.16,800 – 24,110.
தகுதி: பாத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanical,
Metallurgy, Electrical, Instrumentation, Chemical துறைகளில் டிப்ளமோ
முடித்திருக்க வேண்டும்.
பணி: Attendant Cum Technician (Trainee) – 70
சம்பளம்: மாதம் ரூ.15,830 – 22,150.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Fitter, Electrical பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: Attendant Cum Technician (Trainee) (Heavy Vehicle Operation)
சம்பளம்: மாதம் ரூ.15,830 – 22,150.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
பணி: சிறப்பு மருத்துவர்கள்:
1. குழந்தைகள் நல சிறப்பு டாக்டர் – 01.
2. முடநீக்கியியல் நிபுணர் – 01.
3. மகப்பேறு நிபுணர் – 01.
4. காது, மூக்கு, தொண்டை நிபுணர் – 01.
சம்பளம்: மாதம் ரூ.32,900 – 58,000.
தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்து எம்.டி,
எம்எஸ் அல்லது சம்பந்தப்பட்ட பிரிவில் அதற்கு சமமான கல்வித்தகுதி மற்றும் 3
ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.
பணி: மருத்துவ அதிகாரி – 05
சம்பளம்: மாதம் ரூ.20,600 – 46,500.
தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்து முதுகலை
பட்டம் முடித்து ஏதாவதொரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
குறைந்தபட்சம் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: பல் மருத்துவர் – 01
சம்பளம்: மாதம் ரூ.20,600 – 46,500.
தகுதி: பல் மருத்துவ துறையில் பிடிஎஸ் முடித்து
மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1 ஆண்டு பணி அனுபவம் அல்லது எம்டிஎஸ்
முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: முதல்வர்- ஸ்கூல் ஆப் நர்சிங் – 01
சம்பளம்: மாதம் ரூ.20,600 – 46,500
தகுதி: செவிலியர் பிரிவில் எம்.எஸ்சி அல்லது பிஎஸ்சி.,
எம்.எஸ்சி நர்சிங் முடித்து 6 ஆண்டு பயிற்றுவிக்கும் அனுபவமும், பிஎஸ்சி
நர்சிங் முடித்தவர்கள் 8 ஆண்டுகள் பயிற்றுவிக்கும் அனுபவமும் பெற்றிருக்க
வேண்டும்.
வயது வரம்பு: 34க்குள் இருக்க வேண்டும்.
பணி: நர்சிங் கண்காணிப்பாளர் – 01
சம்பளம்: மாதம் ரூ.20,600 – 46,500.
தகுதி: செவிலியர் துறையில் எம்.எஸ்சி அல்லது பி.எஸ்சி
முடித்து ஒரு நிறுவனத்தில் அல்லது மருத்துவமனையில் 6 – 8 ஆண்டுகள்
பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 05.08.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.
விண்ணப்பதாரர்கள் www.sail.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.08.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment