Search This Blog

Wednesday, August 3, 2016

நறுமணப் பொருட்கள் வாரியத்தில் பணி

கேரள மாநிலம், கொச்சியில் செயல்பட்டு வரும் நறுமணப் பொருட்கள் வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 32 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி – காலியிடங்கள் விவரம்:
பணி:   Scientist ‘B’ (Chemistry)- 01
சம்பளம்: 
        மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
வயது: 
         01.06.2016 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி
      வேதியியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி:
      Field Officer – 05
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
வயது வரம்பு: 
     1.6.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 
  வேளாண்மை, தோட்டக்கலை பிரிவில் இளநிலை பட்டம் அல்லது தாவரவியல் பாடத்தில் எம்.எஸ்சி. மேலும்  அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
பணி:  Senior Microbiologist – 01
சம்பளம்: 
    மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,800.
வயது வரம்பு: 
   1.6.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:
   பயோடெக்னாலஜி துறையில் எம்.எஸ்சி., மற்றும் அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Clerk – 03
சம்பளம்:
     மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
வயது வரம்பு:
      1.6.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:
   ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்று அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
பணி: Extension Assistant – 05
சம்பளம்:
    மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
வயது வரம்பு: 
    01.06.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:
 வேளாண்மை, தோட்டக்கலை, தாவரவியல் பிரிவில் இளநிலை பட்டம். மேலும் அடிப்படை கணினி அறிவு பெற்று 5  வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Chemist – 08:
சம்பளம்:
     மாதம் ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.
வயது வரம்பு: 
  01.06.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 
   வேதியியல் பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம்.
பணி: Junior Microbiologist – 02
சம்பளம்: 
   மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,900,
வயது வரம்பு:
    01.06.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:
    நுண்ணுயிரியல்(Micro biology) பாடத்தில் இளநிலை பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Agriculture Demonstrator – 07
சம்பளம்: 
   மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
வயது வரம்பு:  
    1.6.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 
   Agriculture பாடத்தில் இளநிலை பட்டம். மேலும் அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: 
  எழுத்துத்தேர்வு, செய்முறை தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: 
    ரூ.400. இதனை The Secretary,Spices Board என்ற பெயரில் கொச்சியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி., முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: www.indianspices.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.08.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.indianspices.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

இந்திய ராணுவத்தில் செவிலியர் பணி

இந்திய ராணுவத்தில் நிரப்பப்பட உள்ள செவிலியர் பணிக்கு செவிலியர் துறையில் எம்.எஸ்சி அல்லது பிஎஸ்சி நர்சிங் படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி  
                செவிலியர்
தகுதி : 
          செவிலியர் துறையில் எம்.எஸ்சி, பிஎஸ்சி படித்திருக்க வேண்டும். மாநில நர்சிங் கவுன்சிலில் மிட்வொய்ப்பாக பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம்: 
               மாதம் ரூ.15,600. + ரூ.5,400. ராணுவ சேவை ஊதியம் ரூ.4,200 மற்றும் இதர படிகள்.
வயது வரம்பு: 
                    21 – 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: 
           எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு செப்டம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் நடைபெறும்.
எழுத்துத் தேர்வு மையம்: 
                            லக்னோ, புனே
நேர்முகத் தேர்வு: 
                          அக்டோபர் மாதத்தில் புதுதில்லியில் நடைபெறும்.
மேற்கண்ட தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் 14 ஆண்டுகள் பணியில் லெப்டினென்ட் அந்தஸ்தில் நியமிக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
       www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.08.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

இந்திய கடற்படை கப்பல்கள், இந்திய கடலோர காவல்படை கப்பல்களை தயாரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணி

இந்திய கடற்படை கப்பல்கள், இந்திய கடலோர காவல்படை கப்பல்களை தயாரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணியிலும் ஈடுபட்டு வரும் கோவா கப்பல் கட்டும் தளத்தில் நிரப்பப்பட உள்ள நிர்வாகம் அல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி – காலியிடங்கள் விவரம்: 
பணி: Assistant Superintendent (Finance) – 04
பணி: Assistant Superintendent (Human Resources) – 01
பணி: Office Assistant – 01
பணி: Cook – 01
பணி: Painter – 01
பணி: Trainee Structural Fitter – 06
பணி: Trainee Marine Fitter – 03
வயது வரம்பு: 31 – 33க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.goashipyard.com அல்லது www.goashipyard.co.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Chief General Manager (HR &A),
Goa Shipyard Limited,
Vaddem,
Vascodagama,
GOA-403802.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.08.2016.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 18.08.2016.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு சலுகை, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய  www.goashipyard.com அல்லது www.goashipyard.co.in என்ற இணையதளங்களை பார்க்கவும்.

செயில் நிறுவனத்தில் பணி

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான செயில் நிறுவனத்தில் நிர்வாக மற்றும் நிர்வாகம் சாரத பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி – காலியிடங்கள் விவரம்:
பணி: Operator Cum Technician (Trainee) – 134
சம்பளம்: மாதம் ரூ.16,800 – 24,110.
தகுதி: பாத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanical,  Metallurgy, Electrical, Instrumentation, Chemical  துறைகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Attendant Cum Technician (Trainee) – 70
சம்பளம்: மாதம் ரூ.15,830 – 22,150.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Fitter, Electrical பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: Attendant Cum Technician (Trainee) (Heavy Vehicle Operation)
சம்பளம்: மாதம் ரூ.15,830 – 22,150.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: சிறப்பு மருத்துவர்கள்:
1. குழந்தைகள் நல சிறப்பு டாக்டர் – 01.
2. முடநீக்கியியல் நிபுணர் – 01.
3. மகப்பேறு நிபுணர் – 01.
4. காது, மூக்கு, தொண்டை நிபுணர் – 01.
சம்பளம்: மாதம் ரூ.32,900 – 58,000.
தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்து எம்.டி, எம்எஸ் அல்லது சம்பந்தப்பட்ட பிரிவில் அதற்கு சமமான கல்வித்தகுதி மற்றும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.

பணி: மருத்துவ அதிகாரி – 05
சம்பளம்: மாதம் ரூ.20,600 – 46,500.
தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்து முதுகலை பட்டம் முடித்து ஏதாவதொரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குறைந்தபட்சம் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: பல் மருத்துவர் – 01
சம்பளம்: மாதம் ரூ.20,600 – 46,500.
தகுதி: பல் மருத்துவ துறையில் பிடிஎஸ் முடித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1 ஆண்டு பணி அனுபவம் அல்லது எம்டிஎஸ் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: முதல்வர்- ஸ்கூல் ஆப் நர்சிங் – 01
சம்பளம்: மாதம் ரூ.20,600 – 46,500
தகுதி: செவிலியர் பிரிவில் எம்.எஸ்சி அல்லது பிஎஸ்சி., எம்.எஸ்சி நர்சிங் முடித்து 6 ஆண்டு பயிற்றுவிக்கும் அனுபவமும், பிஎஸ்சி  நர்சிங் முடித்தவர்கள் 8 ஆண்டுகள் பயிற்றுவிக்கும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 34க்குள் இருக்க வேண்டும்.

பணி: நர்சிங் கண்காணிப்பாளர் – 01
சம்பளம்: மாதம் ரூ.20,600 – 46,500.
தகுதி: செவிலியர் துறையில் எம்.எஸ்சி அல்லது பி.எஸ்சி முடித்து ஒரு நிறுவனத்தில் அல்லது மருத்துவமனையில் 6 – 8 ஆண்டுகள் பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 05.08.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.
விண்ணப்பதாரர்கள் www.sail.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.08.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.