மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான முத்திரைத்தாள் அச்சகத்தில் (SPMCIL) காலியாக உள்ள இளநிலை டெக்னீஷியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
No.Admn./2(167)/2016-17/Advt. No.10
பணி : ஜூனியர் டெக்னீஷியன்
காலியிடங்கள் : 28
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ-யில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.5,200 - 20,20,000 + தர ஊதியம் ரூ.1,800.
வயது வரம்பு : 20.07.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பிலிருந்து எஸ்சி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : spmhoshangabad.spmcil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.07.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://spmhoshangabad.spmcil.com/UploadDocument/Adv_Eng_%20Hindi.649fe7f0-0ef8-4bfd-903e-787617a61cb3.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
